ஜீ தமிழில் சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பை தொடங்கி அசத்தி வரும் தொடர் நினைத்தாலே இனிக்கும்.ஆனந்த் செல்வன்,ஸ்வேதா சர்மா இந்த தொடரின் முன்னணி வேடங்களில் நடித்து அசத்தி வருகின்றனர்.இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருபவர் ஜனனி பிரபு.இந்த தொடர் மூலம் தனது சின்னத்திரை என்ட்ரியை கொடுத்தார் ஜனனி.நளினி என்ற கதாபாத்திரத்தில் இவர் அசத்த , இவரது நடிப்பினை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது இவர் நடிக்கும் புதிய தொடர் குறித்த தகவல் கிடைத்துள்ளது.கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகவுள்ள வள்ளி திருமணம் என்ற தொடரில் ஜனனி பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்,இதறகான ஷூட்டிங்கையும் தொடங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் பகிர்ந்துள்ளார்.

தனது நடிப்பால் நினைத்தாலே இனிக்கும் தொடரில் அசத்தியது போல இந்த தொடரிலும் அசத்த நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.கலர்ஸ் தமிழில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள இந்த தொடரில் யாரடி நீ மோஹினி தொடரில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நக்ஷத்திரா ஹீரோயினாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ninaithale inikkum fame janane prabhu joins the cast of valli thirumanam