தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்ட நடிகர்களில் ஒருவர் அருண் விஜய்.இவர் நடிப்பில் அடுத்து வரவுள்ள திரைப்படம் தடம். தடையற தாக்க படத்தை இயக்கி அருண் விஜய்க்கு என்று ஒரு பெயரை பெற்று தந்த மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குகிறார்.

தன்யா ஹோப் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.யோகி பாபு , வித்யா பிரதீப் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.அருண் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

New Four Minute Sneak Peek From Arun VIjay Chrime Thriller Thadam Released Directed by Magizh Thirumeni

இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.ஹீரோ அருண் விஜய் மற்றும் ஹீரோயின் இருவரின் காதல் காட்சிகளில் ஒன்றான இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அந்த 4 நிமிட ப்ரோமோ வீடியோ கட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.