2018-ல் உலக BoxOffice-ல் சக்கை போடு போட்ட திரைப்படம் Avengers Infinity War. Superhero படங்களை தயார் செய்யும் Marvel நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான இந்த படம் இந்தியாவிலும் வசூலை அள்ளி குவித்தது.

Marvel Superhero படங்களுக்கு இந்தியாவில் குறிப்பாக தமிழில் நல்ல வரவேற்பு கிடைப்பதை உணர்ந்த தயாரிப்பு நிறுவனம்,பிரபல இயக்குனரான A.R.முருகதாஸை Avengers EndGame பதிப்புக்கு வசனம் எழுத ஒப்பந்தம் செய்தது.அடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் Marvel Anthem வெளியிடப்பட்டுள்ளது.அதோடு விஜய்சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா இருவரும் தமிழ் Version-ல் டப்பிங் கொடுத்துள்ளனர்.

தற்போது இந்த படத்தில் இருந்து முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.இந்த படம் உலகளவில் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.