பிரபல இயக்குனர் ஏ.வெங்கடேஷ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘நேத்ரா’. இந்தல் படத்தில் வினய் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சுபிஷா மற்றும் ரித்விகா நடித்துள்ளனர். மேலும் படத்தில் தமன்குமார், மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். 

Nethra Movie Sneak Peek Released With The Reference Of Vettaiyadu Vilayadu Movie Intro

இயக்குனர் ஏ.வெங்கடேஷுக்கு உதவிடும் வகையில் நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன், தன்னுடைய ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் படத்தை வாங்கி வெளியிடுகிறார்.

திரில்லர் படமான இப்படத்தில் காமெடி எலிமெட்ஸ் அதிகமாக இருக்கவேண்டும் என்று எண்ணி, வேட்டையாடு விளையாடு படத்தின் இன்ட்ரோ காட்சியை போல் இதன் Sneak-Peek வெளியானது. கிளாஸ் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தின் இன்ட்ரோ காட்சிக்கு இன்று வரை மவுசு உள்ளது. புகழ் பெற்ற ஒரு படத்தின் காட்சியை மற்றோரு படத்தில் சேர்ப்பதும் ஒருவிதமான ப்ரோமோஷனே.