மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற வெற்றி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சிந்துபாத். இந்தப் படத்தை கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன்சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. 

Nenja Unakaga The Second Song From Sindhubaadh Movie Released In Yuvan Musical

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். அதுமட்டுமல்லாமல் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடிக்கிறார்.

Nenja Unakaga The Second Song From Sindhubaadh Movie Released In Yuvan Musical

தற்போது படத்தின் இரண்டாம் பாடலான நெஞ்ச உனக்காக வெளியாகியது. ஏற்கனவே வெளியான ராக்ஸ்டார் ராபர் பாடல் அமோக வரவேற்ப்பை பெற்றது போல இந்த பாடலும் நல்ல ரீச் அளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஹரிச்சரன் பாடியுள்ள இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.