லியோ படத்துடன் ஆயுத பூஜை ரேசில் இறங்கும் ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வரராவ்... சர்ப்ரைஸாக வந்த அதிரடியான டீசர் INVASION வீடியோ இதோ!

ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வரராவ் பட டீசர் வீடியோ,ravi teja in tiger nageswara rao movie tigers invasion video out now | Galatta

தளபதி விஜயின் லியோ படத்துடன் ஆயுத பூஜை ரேசில் களம் இறங்கும் மற்றொரு பேன் இந்தியா படமான ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்தின் டீசர் வீடியோவாக TIGER'S INVASION என்ற வீடியோவை பட குழு தற்போது வெளியிட்டுள்ளது. தெலுங்கு திரை உலகின் நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் ரவி தேஜா. அடுத்தடுத்து அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்த ரசிகர்களை மகிழ்வித்து வரும் ரவி தேஜா நடிப்பில் முதல் பெண் இந்தியா படமாக பிரம்மாண்டமாக வெளிவர இருக்கிறது டைகர் நாகேஸ்வர ராவ் எனும் திரைப்படம். ஆந்திராவின் ஸ்டூரத்புரம் பகுதியில் 1970களில் மிகப் பிரபலமான மற்றும் பயங்கரமான கொள்ளைக்காரனாக வலம் வந்த நாகேஸ்வர ராவ்-ன் பயோபிக் படமாக தயாராகும் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி கிருஷ்ண நாயுடு இயக்குகிறார். ரவி தேஜா உடன் இணைந்து காயத்ரி பரத்வாஜ், நிப்பூர் சனான் உள்ளிட்ட பலர் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்தில் நடிக்கின்றனர். 

அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அபிஷேக் அகர்வால் தயாரிக்க, பிரம்மாண்ட திரைப்படமாக  தயாராகும் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்திற்கு R.மதி ஒளிப்பதிவு ஒளிப்பதிவு செய்ய, ஜீவி ப்ரகாஷ் குமார் இசையமைக்கிறார். ரவி தேஜாவின் மிரட்டலான ஆக்ஷனில் வெளிவரும் டைகர் நாகேஸ்வரராவ் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டில் அக்டோபர் 20ஆம் தேதி ஆயுதபூஜை வெளியீடாக ரிலீஸாக இருக்கும் நிலையில் முன்னதாக அக்டோபர் 19ஆம் தேதி தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வரராவ் மற்றும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் மட்டுமல்லாது கன்னடத்தில் சிவராஜ்குமார் அவர்களின் நடிப்பில் தயாராகி இருக்கும் கோஸ்ட், தெலுங்கு சினிமாவின் மற்றொரு நட்சத்திர நாயகராக பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக திகழும் நந்தாமுரி பாலகிருஷ்ணா அவர்கள், இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் நடித்துள்ள பகவந்த் கேசரி திரைப்படமும் இயக்குனர் போயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் முன்னணி தெலுங்கு நடிகர் ராம் பொத்திநேனி நடித்துள்ள ஸ்கந்தா படமும் இதே ஆயுத பூஜை வெளியிடாக அக்டோபர் 19-20ஆம் தேதிகளில் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே பெரிய படங்கள் ரிலீஸாவதால் டைகர் நாகேஸ்வரராவ் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிவந்தன. இதற்கு விளக்கமளிக்கும் வகையில், “எந்த அடிப்படையும் இல்லாமல் டைகர் நாகேஸ்வரராவ் திரைப்படம் அக்டோபர் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டபடி ரிலீஸ் ஆகாது என தகவல்கள் பரவி வருகின்றன. படம் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கும் நிலையில் சிலர் இந்த வதந்திகளை வேண்டுமென்றே பரப்பி வருகிறார்கள். எனவே எந்த வதந்திகளையும் நீங்கள் நம்ப வேண்டாம். அட்டகாசமான சினிமா அனுபவத்தை உங்களுக்கு கொடுப்பதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம் டைகர் அறிவித்தபடி அக்டோபர் 20ஆம் தேதி பாக்ஸ் ஆபிஸில் வேட்டையை நடத்தும்.” என படக்குழு தரமான பதிலடி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக தற்போது டைகர் நாகேஸ்வர ராவ் பட குழுவினர் தற்போது அதிரடியான புதிய டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். TIGER'S INVASION என வெளிவந்திருக்கும் இந்த புதிய டீசர் வீடியோ தற்போது ரசிகர்களுடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிரடியான அந்த வீடியோ இதோ…