காந்தாரா 2: ரிஷப் ஷெட்டியின் மிரட்டலான லுக்கில் வந்த மிரள வைக்கும் காந்தாரா A LEGEND - CHAPTER 1 பட ஃபர்ஸ்ட் லுக் டீசர் இதோ!

ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 2 A LEGEND - CHAPTER 1 பட ஃபர்ஸ்ட் லுக் டீசர்,rishab shetty in kantara a legend chapter 1 movie first look teaser | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த காந்தாரா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது. ரிஷப் ஷெட்டியின் மிரட்டலான அவதாரத்தில் காந்தாரா எ லெஜன்ட் சாப்டர் 1 என்ற காந்தாரா படத்தின் PREQUAL படமாக வரும் அதன் இரண்டாவது பாகத்தில் மிரள வைக்கும் ஃபர்ஸ்ட் லுக் டீசர் தற்போது வெளிவந்து ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையும் அதிர வைத்திருக்கிறது. இந்த படத்தையும் ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி நடிக்கிறார். அனிருத் மகேஷ் மற்றும் ஷானில் குரு ஆகியோர் இணை எழுத்தாளர்களாக பணியாற்றியுள்ளனர். அரவிந்த் S கஷ்யப் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்திற்கு அஜினீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இந்த முறை காந்தாரா 2 திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளிவர இருப்பதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். காந்தாரா படத்தின் முன்பு நடந்த கதைக்களம் என்பதால் இந்த காந்தாரா எ லெஜன்ட் சாப்டர் 1 ஒரு பிரம்மாண்டமான பீரியட் ஆக்சன் படமாக காந்தாரா படத்தின் ஃபேண்டஸி விஷயங்கள் நிறைந்து ரசிகர்கள் கொண்டாடும் மிரட்டலான ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சற்று முன் வெளிவந்த காந்தாரா எ லெஜன்ட் சாப்டர் 1 ஃபர்ஸ்ட் லுக் டீசர் இதோ…

 

கன்னட சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக திகழும் ரிஷப் ஷெட்டி இயக்குனராகவும் அற்புதமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். அந்த வகையில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்து உலக அளவில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு பாராட்டுகளையும் வாரிக் குவித்தது. கதையின் நாயகனாக ரிஷப் ஷெட்டி தந்தை மகன் என இரு வேடங்களில் நடிக்க, சப்தமி கௌடா கதாநாயகியாக நடித்தார். தென்னிந்திய சினிமாவின் தனித்துவமான நடிகர்களில் ஒருவரான கிஷோர் கதையின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அச்சுத்குமார், பிரமோத் ஷெட்டி, பிரகாஷ் தும்மினாட், மானசி சுதிர் உள்ளிட்டோர் மற்ற முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வெறும் 16 கோடி ரூபாய் பொருட்செளவில் உருவாக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 450 கோடி ரூபாய் வரை வசூல் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. திரையரங்குகளில் கொண்டாடப்பட்ட காந்தாரா திரைப்படத்தை தொடர்ந்து OTTயிலும் ரசிகர்கள் ரசித்தனர். 

இதனிடையே காந்தாரா திரைப்படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரிஷப் ஷெட்டி காந்தாரா திரைப்படத்தின் 2வது பாகம் குறித்த மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். முன்னதாக காந்தாரா திரைப்படத்தின் 2வது பாகம் விரைவில் தயாராக இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில், “வரப்போவது 2வது பாகம் அல்ல நீங்கள் பார்த்தது தான் 2வது பாகம். முதல் பாகம் தான் அடுத்து தயாராகி வருகிறது” என ரிஷப் ஷெட்டி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். எனவே காந்தாரா 2 திரைப்படம் PREQUEL திரைப்படமாக இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் காத்திருந்த ரசிகர்களுக்கு பக்கா விருந்து கொடுக்கும் வகையில் காந்தாரா படத்தின் இரண்டாவது பாகமாக தயாராகும் காந்தாரா எ லெஜன்ட் சாப்டர் 1 திரைப்படத்தின்  டீசரை பட குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். மிரட்டலான இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. தொடர்ந்து காந்தாரா எ லெஜன்ட் சாப்டர் 1 படத்தின் இதர அறிவிப்புகள் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.