காதல் - தி கோர்:'அழகான மனங்கள் ஒன்று சேர்ந்தால்..'- மம்மூட்டி - ஜோதிகாவின் முதல் மலையாள பட விமர்சனம் கொடுத்த சூர்யா!

மம்மூட்டி - ஜோதிகாவின் காதல் - தி கோர் பட விமர்சனம் கொடுத்த சூர்யா,suriya shared a review of mammootty jyotika in kaathal the core movie | Galatta

தனது மனைவியும் முன்னணி நடிகையுமான ஜோதிகாவின் முதல் மலையாள படத்திற்கு நடிகர் சூர்யா தனது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார். நடிகர் மம்மூட்டி மற்றும் நடிகை ஜோதிகா இணைந்து நடித்த மலையாள படமான காதல் - தி கோர் திரைப்படத்தை பார்த்து ரசித்த நடிகர் சூர்யா தனது விமர்சனத்தை பகிர்ந்து இருக்கிறார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அழகான மனங்கள் ஒன்று சேர்ந்தால் காதல் தி கோர் போன்ற திரைப்படங்கள் கிடைக்கும். என்ன ஒரு முற்போக்கான படம் இந்த அழகான குழுவிற்கு வாழ்த்துக்கள்! நன்றி  மம்முட்டி சார் நல்ல சினிமா மீதான காதலுக்கும் உத்வேகத்துக்கும். ஜியோ பேபி இசையில் அமைதியான காட்சிகள் கூட ஒலித்தன. வாழ்த்துகள் , இந்த உலகத்தை நமக்கு காட்டிய எழுத்தாளர்கள் ஆதர்ஷ் சுகுமாரன் பால்சன் ஸ்கரியா! மேலும் காதல் என்னவாக இருக்கும் என்பதைக் காட்டி அனைத்து மனங்களையும் வென்றதற்காக என் ஓமனா ஜோதிகா!!! காதல் தி கோர் - உயர்ந்தது!” எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். சோசியல் மீடியாவில் வைரலாகும் நடிகர் சூர்யாவின் அந்த பதிவு இதோ…

 

 

View this post on Instagram

A post shared by Suriya Sivakumar (@actorsuriya)

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம் நாயகர்களில் ஒருவரான நடிகர் மம்மூட்டி உடன் முதல் முறையாக நடிகை ஜோதிகா இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தான் காதல் - தி கோர். இது நடிகை ஜோதிகாவின் முதல் மலையாள படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக மலையாளத்தில் வெளிவந்து இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜோ பேபி காதல் - தி கோர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். மம்மூட்டி மற்றும் ஜோதிகா உடன் இணைந்து லாலு அலெக்ஸ், முத்துமணி, சின்னு சாந்தினி, சுதி கோழிக்கோடு, அனகா அக்கு உள்ளிட்டோரும் காதல் - தி கோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சன் சக்கரியா இருவரும் இணைந்து காதல் - தி கோர் திரைப்படத்தில் கதை திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளனர். ஷாலு.K.தாமஸ் ஒளிப்பதிவில், பிரான்சிஸ் லூயிஸ் படத்தொகுப்பு செய்ய, காதல் - தி கோர் படத்திற்கு மேத்யூஸ் புலிக்கண் இசையமைத்துள்ளார். 

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கி 2022 நவம்பர் மாதத்திற்குள் காதல் - தி கோர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கடந்த நவம்பர் 23ஆம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் திரைப்படம் ரிலீஸ் ஆனது. நடிகை ஜோதிகாவின் திரை பயணத்திலேயே இல்லாத அளவிற்கு மிகவும் அழுத்தமான கதைக்களம் கொண்ட எதார்த்தமான ஒரு திரைப்படமாக இருக்கும் என, முதல் முதலில் வந்த போஸ்டரில் இருந்து கடைசியாக வந்த ட்ரெய்லர் வரை மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் நிலவிய நிலையில் தற்போது மொத்த எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் காதல் - தி கோர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தன்னுடைய முதல் மலையாள படமாக நடிகை ஜோதிகா நடித்திருக்கும் இந்த காதல் - தி கோர் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து மலையாள படங்களில் ஜோதிகா நடிக்க வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.