விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி 2 வாரங்களை நிறைவு செய்கிறது. முன்னதாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நமிதா மாரிமுத்து முதல் வாரத்திலேயே தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  2-வது வாரத்தின் ஆரம்பத்தில் முதல் கேப்டனுக்கான போட்டியும் நாமினேஷன் பிராசஸும் நடைபெற்றது. 

அதில் தாமரைச்செல்வி பிக்பாஸ் 5-ன் முதல் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற நாமினேஷன்-ல் பாவனி மற்றும் தாமரைச்செல்வியை தவிர மற்ற 15 போட்டியாளர்களும் எவிக்சன் ப்ராசஸுக்கு தேர்வானார்கள். எனவே பிக் பாஸ் 5 நிகழ்ச்சியிலிருந்து முதலாவதாக எலிமினேட்டாகும் போட்டியாளர் யார் என்பதை மக்கள் வாக்களித்து முடிவு செய்துள்ளனர். 

நேற்று  (அக்டோபர் 16-ஆம் தேதி) நடைபெற்ற பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில்  பிரியங்கா, இமான் அண்ணாச்சி, இசைவாணி, அபினய், சிபி, நிரூப்,  ராஜூ, சுருதி, அக்ஷரா, வருண் என 10 போட்டியாளர்கள் எலிமினேஷனிலிருந்து காப்பாற்றப்பட்டனர். மீதமுள்ள அபிஷேக் ராஜா, ஐக்கி பெர்ரி, நாடியா, மதுமிதா, மற்றும் சின்னப்பொண்ணு ஆகிய ஐவரில் இருந்து இன்று நாடியா சாங் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மலேசியா வாழ் தமிழரும் பிரபல மாடலுமான நாடியா சாங் பிக் பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சியின் முதலாவது எலிமினேஷன் என்பது குறிப்பிடத்தக்கது. 16 போட்டியாளர்களுடன் நகரும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.