சௌராஷ்ட்டிரா ரஞ்சி அணியின் இளம் பேட்ஸ்மேன் அவி பரோட் மாரடைப்பால் திடீரென்று உயிரிழந்து உள்ள சம்பவம், இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

14 வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதை அடுத்து, தோனியின் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வரும் நிலையில், அந்த கொண்டாட்டத்தை முழுமையாக உணர்வதற்குள், இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தவர் 29 வயதான அவி பரோட். 

வெறும் 29 வயதே ஆன அபி பரோட், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் முன்னாள் கேப்டனான திகழ்ந்தவர் ஆவர். 

இது மட்டுமல்லாமல் ராஞ்சி கோப்பை தொடரில் 2019 - 20 ஆம் ஆண்டில் சீசனில் சவுராஷ்ட்ரா அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக அவர் அமைந்திருந்தார். 

அத்துடன், அவி பரோட் 38 முதல் தர போட்டிகளில் இது வரை விளையாடி இருக்கிறார்.

மேலும், சவுராஷ்டிராவுக்காக 21 ரஞ்சி கோப்பை போட்டிகள், 17 ஏ பிரிவு போட்டிகள் மற்றும் 11 டி 20 போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார். 

அவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் சையத் முஷ்டாக் அலி ட்ராஃபியில் வெறும் 53 பந்துகளில் 122 ரன்களை குவித்திருந்தார். 

மிக முக்கியமாக, அவர் விரைவில் ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால், இந்த நேரத்தில் தான், வெறும் 29 வயதே ஆன அபி பரோட், இன்றைய தினம் திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.

குறிப்பாக, பல விளையாட்டு வீரர்கள் சமீப வருடங்களில் மாரடைப்பால் இளம் வயதிலேயே உயிரிழப்பது தொடர்கதை ஆகி வருவது வேதனையாக ஒரு விசயமாக இருக்கிறது. 

இதற்கு, மிக முக்கியமாக விளையாட்டு வீரர்களின் மன அழுத்தமே ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே, கடந்த காலங்களில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தொடர் விளையாட்டுகளில் இருந்து திடீரென ஓய்வு எடுத்துக்கொண்டது, கிரிக்கெட் உலகில் பெரிய அளவில் பேசப்பட்டது.

இதனிடையே, “21 ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடியுள்ள அவி பரோட் உயிரிழப்பானது, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியும் வேதனையும் அளித்திருப்பதாக“ சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் இரங்கள் தெரிவித்து உள்ளது. 

இவற்றுடன், “அவரது ஆன்மா சாந்தியடையை எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதகவும், அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும்” சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் இரங்கள் தெரிவித்து உள்ளது.