லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். அடுத்ததாக தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

முன்னதாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா அருள்மோகன், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லீ, இளவரசு, அர்ச்சனா, தீபா இவர்களுடன் நடிகர் வினய் ஆகியோர் இணைந்து நடித்துள்ள டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பு செய்துள்ள டாக்டர் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் சிறந்த டார்க் காமெடி திரைப்படமாக வெளிவந்திருக்கும் டாக்டர் படத்தால் நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்குகள்  ரசிகர்களின் சிரிப்பால் நிறைந்தது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தில் இடம் பெறாத DELETED SCENE  தற்போது YouTube-ல் வெளியானது. இதுவரை வெளிவராத டாக்டர் திரைப்படத்தின் இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கலகலப்பான டாக்டர் DELETED SCENE வீடியோவை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.