காக்க காக்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து தனது வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் கெளதம் மேனன்.கடைசியாக இவர் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீசானது.

இதனை தொடர்ந்து வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் வருண் நடிக்கும் ஜோசுவா என்ற படத்தை கெளதம் மேனன் இயக்குகிறார்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கெளதம் மேனன் இயக்கிய குயின் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து இந்த லாக்டவுன் நேரத்தில் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தையும்,ஒரு சான்ஸ் குடு என்ற ஆல்பம் பாடலையும் வெளியிட்டார் கெளதம் மேனன்.இதில் சமீபத்தில் வெளியான ஒரு சான்ஸ் குடு பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஜோஷுவா படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்ததும் இந்த படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு தொடங்கும் என்று இயக்குனர் கெளதம் மேனன் தெரிவித்திருந்தார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் முதல் பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றிருந்தது. 

இந்த படத்தின் இரண்டாவது பாடல் வரும் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என்று சில நாட்களுக்கு முன் அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.நான் உன் ஜோஷுவா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலின் உருவான விதம் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர்.இதனை தொடர்ந்து இந்த படத்தின் ப்ரோமோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.கெளதம் மேனன் அந்த பாட்டை முணுமுணுப்பது போல வரும் இந்த வீடியோ ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேப்பை பெற்றுள்ளது.இந்த பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வீடியோ பாடலாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.