விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று அரண்மனை கிளி.வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தது.இந்த தொடரில் மோனிஷா,சூர்ய தர்ஷன் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.இவர்கள் இருவருக்கும் தனி தனியாக ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

200 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிவந்த இந்த சில காரணங்களால் இந்த தொடர் கைவிடப்பட்டது.இந்த தொடரின் நாயகி மோனிஷா பெரிய வரவேற்பை பெற்றிருந்தார்.அவ்வப்போது தனது நடன வீடியோக்களை ரசிகர்களுடன் பதிவிட்டு மகிழ்ந்து வந்தார் மோனிஷா.

இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இந்த தொடர் நிறைவடைந்த பின் விஜய் டிவியின் பெரிய ஹிட் தொடரான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வந்தார்.இந்த தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

தற்போது இவர் நடிக்கும் புதிய சீரியல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகவுள்ள பச்சக்கிளி என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.இந்த தொடர் வரும் ஜூலை 4ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான ப்ரோமோ வீடியோ விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.