காரில் காதலனுடன் இளம் பெண் உல்லாசம்! கிடைத்தது கோடி.. புலம்பும் லேடி..

காரில் காதலனுடன் இளம் பெண் உல்லாசம்! கிடைத்தது கோடி.. புலம்பும் லேடி.. - Daily news

காதலனுடன் இளம் பெண் காரில் உல்லாசம் அனுபவித்ததால்,  40 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்த நிலையிலும், அந்த பெண் புலம்பி தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் தான் இப்படி ஒரு வித்திசாயமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, அமெரிக்காவில் உள்ள மிசோரி மாகாணத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனுடன் சமீபத்தில் காரில் நீண்ட தூரம் பயணித்து ஒரு ரைட் சென்று உள்ளார்.

அப்போது, அவர்கள் இருவரும் காரை நிறுத்திவிட்டு, நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்த அவர்கள், ஒரு கட்டத்தில் அந்த காரிலேயே அவர்கள் இருவரும் மனம் ஒன்றிப்போய் பாலியல் உறவிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அன்று இரவு அந்த இளம் பெண் வீடு திரும்பிய இருக்கிறார். ஆனால், அந்த பெண்ணின் உடலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளது. 

குறிப்பாக, அந்த பெண்ணிற்கு அன்று இரவு காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட பல உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளன. 

இதனால், பயந்து போன அந்த பெண், அவசர அவசரமாக அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சேர்ந்து உள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்த சோதனையின் முடிவில் “அந்த பெண்ணுக்கு HPV எனப்படும்  human papillomavirus என்ற, பாலியல் உறவில் பரவும் ஒரு விதமான நோய் இருப்பது” கண்டுப்பிடிக்கப்பட்டது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தனது காதலனுடன் இது குறித்து விசாரித்து உள்ளார். 

அப்போது, அந்த பெண்ணின் காதலனுக்கு அதே நோய் ஏற்கனவே இருந்ததை, அவர் தெரிவித்து இருக்கிறார். இதனை தெரிந்தே, தனது காதலியுடன் அந்த இளைஞன் பாலியல் உறவில் ஈடுபட்டதையும், அந்த காதலன் ஒப்புக்கொண்டு இருக்கிறார். 

முக்கியமாக, தனது காதலிக்கு வேண்டும் என்றே இந்த நோயை அவர் பரப்பி இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த காதலி, அந்த காதலனுடன் சண்டைப் போட்டு, அவருடனான காதலை முறித்துக்கொண்டு, அவரை விட்டு பிரிந்திருக்கிறார்.

இதனையடுத்து, அந்த காதலனுக்கு எதிராக அந்த இளம் பெண், அங்குள்ள நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “5 மில்லியன் டாலர் இழப்பீடு கேட்டு” அவர் வலியுறுத்தி இருந்தார். 

முக்கியமாக, அந்த வழக்கில் “காரில் வைத்தே இந்த சம்பவம் நடந்து உள்ளது என்றும், இந்த காரில் சென்று காயம் ஏற்பட்டால் மட்டும் அது விபத்து கிடையாது என்றும், காரில் என்ன நடந்தாலும், என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் விபத்து தான்” என்று, அந்த பெண்ணின் தரப்பில் நீதிமன்றம் வாதிடப்பட்டது. 

அதாவது, “காரில் வைத்து பாலியல் இன்பத்தில் ஈடுபட்டதால் தான், இந்த நோய் பரவியது” என்றும், வாதங்கள் முன்வைக்கப்பட்டதுடன், “இளம் பெண்ணுக்கு இந்த புதிய நோய் ஏற்பட்டதை ஒரு விபத்தாக கருதி, இன்சூரன்ஸ் தர வேண்டும்” என்றும், வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட அந்நாட்டு 3 நீதிபதிகள் கொண்ட அமர்பு, “அந்த பெண்ணுக்கு இந்திய மதிப்பில் 40 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்” என்று, அதிரடியாக தீர்ப்பு அளித்தது.

குறிப்பாக, “காரில் ஏற்பட்ட விபத்து என்பதால், இன்சூரன்ஸ் நிறுவனமே இந்த தொகையை அந்த பெண்ணிற்கு கொடுக்க வேண்டும்” என்றும், நீதிபதி அதிரடியாக  உத்தரவிட்டார்.

இதனிடையே, அந்த இளம் பெண்ணுக்கு 40 கோடி ரூபாய் கிடைக்கும் என்றாலும், அந்த இளம் பெண் அந்த புதிய நோயுடன் தான் வாழ முடியும்” என்றே மருத்துவர்களும் கூறி உள்ளனர். இதனால், 40 கோடி ரூபாய் பணம் கிடைத்தாலும், அந்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள இந்த புதிய நோயால், அந்த பெண் நிம்மதி இன்றி தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment