இந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவராக திகழும் பிருந்தா மாஸ்டர் முன்னணி நட்சத்திர நாயகர்களான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், அஜித் குமார் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்கம் செய்து ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர்.

நீண்ட காலமாக சிறந்த நடன இயக்குனராக வலம் வரும் பிருந்தா மாஸ்டர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். முன்னதாக பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் முதல் படமாக துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதாரி மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடித்த  ஹே சினாமிகா திரைப்பபம் இந்த ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனை அடுத்து பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் அடுத்து தயாராகவுள்ள திரைப்படம் குமரி மாவட்டத்தின் THUGS. பாபி சிம்ஹா, R.K.சுரேஷ், முனீஸ்காந்த் மற்றும் ஹிரிது ஹருண் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் குமரி மாவட்டத்தின் THUGS திரைப்படத்தை ரியா ஷிபு சார்பில் ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.

பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவில், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்யும் குமரி மாவட்டத்தின் THUGS திரைப்படத்திற்கு சாம்.C.S இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் தயாராகி வரும் குமரி மாவட்டத்தின் THUGS திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. கவனத்தை ஈர்க்கும் குமரி மாவட்டத்தின் THUGS டைட்டில் லுக் போஸ்டர் இதோ…