தற்போதைய நிலையில் அனைத்து படங்களிலும் இடம்பெற்றிருக்கும் ஒரு நடிகர் என்றால் அது யோகிபாபு தான்.இவர் இல்லாத படங்கள் மிகவும் குறைவு தான்.தனக்கென ஒரு ஸ்டைலையும்,தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருக்கும் இவர் கடைசியாக சர்கார்,விஸ்வாசம் என்று இரண்டு பெரிய படங்களில் நடித்துள்ளார்.

My Vellakari Video Song From Yogi Babu Starrer Gurhka Released Officially

தற்போது பிகில்,தர்பார்,இந்தியன் 2 என பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார்.அதோடு ஹீரோவாகவும் தர்மபிரபு,கூர்கா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.கூர்கா படத்தினை டார்லிங் படத்தின் இயக்குனர் சாம் ஆன்டன் இயக்குகிறார்.4 Monkeys Studio நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

My Vellakari Video Song From Yogi Babu Starrer Gurhka Released Officially

ராஜ் ஆர்யன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதனை முன்னிட்டு இந்த படத்தின் மை வெள்ளைக்காரி என்ற பாடல் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.