கனா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பில் , சின்னத்திரை தொகுப்பாளரும்,நடிகருமான ரியோவை வைத்து சிவகார்த்திகேயன் ஒரு படத்தை எடுத்து வருகிறார்.Black Sheep குழுவில் உள்ள கார்த்திக் வேணுகோபால் இந்த படத்தை இயக்குகிறார்.

Music Director For Sivakarthikeyan Production Venture starring Rioraj in the Lead

இந்த படத்தில் RJ விக்னேஷ்காந்த்,ராதாரவி,நாஞ்சில் சம்பத் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தது.

Music Director For Sivakarthikeyan Production Venture starring Rioraj in the Lead

தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை அறிவிக்கப்போவதாக படக்குழு அறிவித்திருந்தனர்.சகா படத்திற்கு இசையமைத்து இளைஞர்களின் பேராதரவை பெற்ற ஷபீர் இந்த படத்திற்கு இசையமைப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.