2018-ம் ஆண்டு தமிழ் சினிமா துறை தனக்கென ஒரு பாதையை வழிவகுத்த ஆண்டு என்றே கூறலாம். அதிக படங்கள் அசராமல் வெளியாகி ரசிகர்களுக்கு திரை விருந்தளித்தது. இதன் மூலம் பல புதிய இயக்குனர்கள், நடிகர்கள், துணை நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்களை கண்டெடுத்தது தமிழ் சினிமா. 

Multitalented Artist Arun Raja Kamaraj Bagged People Choice Award In Galatta Debut Awards

அறிமுகமான முதல் படத்திலேயே தங்களது திறனை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்களை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ள மேடை தான் இந்த கலாட்டா விருதுகள். கலை தாகம் உள்ள அறிமுக கலைஞர்களுக்கு இவ்விருதினை அளித்து அங்கீகரித்து அழுகு பார்த்தது கலாட்டா.

Multitalented Artist Arun Raja Kamaraj Bagged People Choice Award In Galatta Debut Awards

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ரசிகர்களின் ஆதர்ஷ இயக்குனராக கனா படத்திற்காக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் விருது பெற்றார். விருது வாங்கியவுடன் தனது குருநாதரான நெல்சன் திலிப்குமாருக்கு நன்றி தெரிவித்த அருண்ராஜா, தனது நண்பன் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தினரை மேடையில் ஏற்றினார்.

Multitalented Artist Arun Raja Kamaraj Bagged People Choice Award In Galatta Debut Awards

அப்போது பேசிய SK, நட்புக்கு அடையாளமா இந்த விருதை வைத்துகொள்வோம் என்று கூறினார். மேலும் இயக்குனர் நெல்சன் திலிப்குமாரிடம், படத்தை போட்டுகாட்டினாராம். அப்போது பார்த்தவர், கடைசி 30 நிமிஷம் சூப்பர். நிச்சயம் ஓகே ஆயிடும் என கூறி உற்சாகப்படுத்தினாராம்.

Multitalented Artist Arun Raja Kamaraj Bagged People Choice Award In Galatta Debut Awards