3 ஆண்டுகள் முடிந்தும் வைப் அடங்காத நிரா பாடலின் வீடியோவை வெளியிட்ட டக்கர் படக்குழு – உற்சாகத்தில் ரசிகர்கள் வைரலாகும் Glimpse இதோ..

நிரா பாடலின் வீடியோவை வெளியிட்ட டக்கர் படக்குழு வைரல் வீடியோ உள்ளே - takkar nira song video out now | Galatta

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து இளமை துள்ளும் திரைப்படமாக ரசிகர்களை குதூகலப் படுத்திய திரைப்படம் பாய்ஸ் இப்படத்தின் ஹீரோவாக நடித்து தமிழ் திரையுலகில் இளம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். முதல் படத்திலே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சித்தார்த் அவருக்கு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வாய்புகள் குவிய பின் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்தார். இடையே தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த சித்தார்த் தற்போது மீண்டும் தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் சித்தார்த் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து தொடர்ந்து டெஸ்ட், சித்தா ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இதனிடையே சித்தார்த் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் டக்கர். பேஷன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தினை கப்பல் பட இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் சித்தார்த் உடன் இணைந்து திவ்யன்ஷா, யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஸ்காந்த், ஆர் ஜே விக்னேஷ் காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய ஜிஏ கௌதம் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. வரும் ஜூன் 9 ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகமெங்கும் டக்கர் திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற நிரா பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.

நிவாஸ் கே பிரசன்னா இசையில் சித் ஸ்ரீ ராம் பாடிய இப்பாடலை பாடியுள்ளார். மேலும் இயக்குனர் கௌதம் மேனன் இப்பாடலில் ராப் பகுதியை பாடியுள்ளார். பாடலாசிரியர் கு கார்த்திக் இப்பாடலை எழுதியுள்ளார். காதல் காட்சிகளும் காதல் பிரிவு காட்சிகளும் இணைந்து  அட்டகாசமான பாடலாக நிரா பாடல் உருவாகியுள்ளது

டக்கர் படம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ரிலீஸ் ஆக வேண்டியது. சில காரணங்களினால் இப்படம் தள்ளி போனது. அப்போதே மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இப்படத்தில் இடம் பெற்ற மரகத மாலை, நிரா ஆகிய பாடல்கள் வெளியானது. நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவான பாடல்கள் மூன்று ஆண்டுகள் முன்னதாகவே டிரண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நிரா பாடலின் வீடியோ ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

 

 

தளபதி 68 டைட்டில் குறித்த அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு.. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ உள்ளே..
சினிமா

தளபதி 68 டைட்டில் குறித்த அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு.. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ உள்ளே..

 முற்றிலும் மாறுபட்ட க்ரைம் திரில்லரில் களம் இறங்கிய சுனைனா..-  ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான டிரைலர் இதோ..
சினிமா

முற்றிலும் மாறுபட்ட க்ரைம் திரில்லரில் களம் இறங்கிய சுனைனா..- ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான டிரைலர் இதோ..

‘ஏ மன்னா.. மாமன்னா..’ தெருக்குரல் அறிவின் அசத்தலான வரிகளில் வெளியானது மாமன்னன் படத்தின் நான்காவது பாடல் – வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

‘ஏ மன்னா.. மாமன்னா..’ தெருக்குரல் அறிவின் அசத்தலான வரிகளில் வெளியானது மாமன்னன் படத்தின் நான்காவது பாடல் – வைரலாகும் Glimpse இதோ..