இரண்டு விஜய் வைத்து படம் இயக்குகிறார் மூடர்கூடம் நவீன் !
By Sakthi Priyan | Galatta | November 01, 2018 10:46 AM IST
கடந்த 2013-ஆம் ஆண்டு வெளிவந்த ‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். இப்படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், இன்றும் நினைவுகூரத்தக்கப் படமாகவும் அமைந்துள்ளது.
இதையடுத்து தற்போது இவர் இயக்கவிருக்கும் படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் முக்கிய பாத்திரத்திலும், இவர்களுடன் நடிகை ஷாலினி பாண்டே நாயகியாகவும் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, நாசர் போன்ற சிறந்த நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். மேலும் இப்படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களின் பட்டியலை விரைவில் வெளியிட இருப்பதாகவும் உள்ளனர் என்ற செய்தி சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.