மூடர் கூடம் திரைப்படத்தை இயக்கிய இளம் இயக்குனர் நவீன்,சிறிய இடைவேளைக்கு பிறகு இயக்கம் படம் அலாவுதீனின் அற்புத கேமரா.இந்த படத்தில் நவீன் ஹீரோவாகவும் நடிக்கிறார்,கயல் ,பரியேறும் பெருமாள் படங்களில் நடித்த ஆனந்தி இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.நடராஜன் சங்கரன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

விஸ்வாசம் ,சர்வம் தாள மயம்,எல்.கே.ஜி போன்ற படங்களை விநியோகம் செய்த சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது.இந்த படம் சுவிட்செர்லாண்ட்,ஜெர்மனி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.தமிழில் முதல்முறையாக 4k HDR தொழில்நுட்பத்தில் வெளியிடப்படவுள்ள முதல் ட்ரைலர் இது தான்.இது தொடர்பான அதிகாராப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.