தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் மோகன் ராஜா  கடைசியாக நடிகர் பகத் பாசில், சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்த வேலைக்காரன் திரைப்படத்தை இயக்கி இருந்தார். அடுத்ததாக தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 153வது திரைப்படத்தை மோகன் ராஜா இயக்குகிறார்.  

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான லூசிஃபர் திரைப்படத்தை பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகும் சிரஞ்சீவி 153 திரைப்படத்தில் நடிகர் சிரஞ்சீவி  கதாநாயகனாக நடிக்க இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார். 

கோனிடெலா புரோடக்சன் கம்பனி மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் எஸ்.தமன் இசை அமைக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் தற்போது சிரு 153 படத்தின் டைட்டில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாளான இன்று வெளியானது. மலையாளத்தில் ஹிட்டான லூசிஃபர் படத்தின் ரீமேக்காக தயாராகும் இத்திரைப்படத்திற்கு காட்ஃபாதர் என பெயரிடப்பட்டுள்ளது.தற்போது வெளியாகியுள்ள காட்பாதர் படத்தின் டைட்டில் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.