தமிழ் திரையுலகில் நல்ல நடிகரை தாண்டி நல்ல மனிதராகவும் விளங்குபவர் தல அஜித்குமாரை ஆலோசகராக கொண்ட சென்னை மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, கல்லூரி மாணவர்கள் குழு உருவாக்கிய தக்ஷா என்ற ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் பங்கேற்று உலக நாடுகளுக்கு சவால் விட்டது. மருத்துவ சேவைக்கு உதவும் ஆளில்லா விமானங்களுக்கான என்ற போட்டி நடத்தப்பட்டது. 

உலகெங்கிலும் இருந்து 55 நாடுகளிலிருந்து ஆளில்லா சிறிய விமானங்கள் இப்போட்டியில் பங்கேற்றன. அதில் 11 விமானங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் நடிகர் அஜித்தை தொழில்நுட்ப ஆலோசகராக கொண்ட மாணவர் குழு விமானம் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மைய்யம் அஜித்தின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தக்க சமயத்தில் உதவிய அஜித்துக்கும், அவரது ஆலோசனைக்கும் நன்றி தெரிவித்துள்ளது. ஆளில்லா விமான தயாரிப்பு திட்டம் முழுமையாக முடிந்து விட்டதாகவும், அஜித்தின் பங்களிப்பு மேலும் தேவை என்றும் அண்ணா பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

MIT Aerospace Research Centre Thanked Thala Ajithkumar For Working With Team Daksha