2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒட்டுமொத்த சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை மிக்ஜாங் புயல் உலுக்கியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கடந்த 48 மணி நேரமாக இடைவிடாது கன மழை பெய்து ஒட்டுமொத்த சென்னையையும் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது இந்த மிக்ஜாங் புயல். தமிழ்நாடு அரசு சார்பில் மீட்பு பணிகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை பார்வையிடுவதோடு நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். நேற்று நவம்பர் 3ம் தேதி இரவு முதல் தனது பணியை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் தனது குழுவோடு இன்று முழுக்க சென்னை மண்டலத்தில் பல்வேறு பகுதிகளில் மீட்பு பணிகளை பார்வையிட்டதோடு நிவாரண பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இடைவிடாத மழையிலும் மக்களுக்கான பணியில் களத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின் அவர்களின் களப்பணிகள் இதோ...
சென்னையில் #CycloneMichuang காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், #ChepaukTriplicane தொகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி இன்று அதிகாலை ஆய்வு மேற்கொண்டோம்.
— Udhay (@Udhaystalin) December 4, 2023
திருவல்லிக்கேணி பெரிய பள்ளி வாசல் - ஐஸ் ஹவுஸ் - அவ்வை… pic.twitter.com/hIPptWFtIf
சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெய்து கொண்டிருக்கும் கனமழைக்கு நடுவே, ராயப்பேட்டை ஜி.பி.சாலை அருகே தண்ணீர் சூழ்ந்துள்ள இடங்களை இன்று பார்வையிட்டோம்.
— Udhay (@Udhaystalin) December 4, 2023
அப்போது, அங்கு வந்திருந்த மாநகராட்சி பணியாளர்களிடம், மழைநீர் வடிவதற்கான பணிகளை கேட்டறிந்து, அவற்றை விரைவுபடுத்திட… pic.twitter.com/uqhPVubhEE
மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் இடைவிடாது மழை பெய்துவரும் சூழலில், #ChepaukTriplicane தொகுதியில், மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டோம். மேலும், அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினோம்.
— Udhay (@Udhaystalin) December 4, 2023
தொடர் மழையால் வீடுகளில்… pic.twitter.com/9SCQNxPFzY
#ChepaukTriplicane தொகுதி, திருவல்லிக்கேணி பகுதி, மாட்டாங்குப்பம், மற்றும் வி.ஆர். தெரு பகுதிகளில் இன்றைய தினம் மழை வெள்ள பாதிப்புக்களை நேரில் ஆய்வு செய்தோம்.
— Udhay (@Udhaystalin) December 4, 2023
தண்ணீர் தேங்கிய பகுதிகள் - சேதமடைந்த வீடுகள் என வரலாறு காணாத மழையாலும் - காற்றாலும் ஏற்பட்டப் பாதிப்புகளை தொகுதி… pic.twitter.com/iQvtNMfbtS
#ChennaiRains2023#CycloneMichuang #ChepaukTriplicane @nchitrarasu @chennaicorp #DarezAhamed pic.twitter.com/diiS4xFkXj
— Udhay (@Udhaystalin) December 4, 2023
இடைவிடாத கனமழை காரணமாக வெள்ளத்தால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் இடங்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு பகுதி வாரியாக அமைச்சர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு தெரிவித்துள்ளது. அமைச்சர்களுக்கு நியமிக்கப்பட்டு இருக்கும் பகுதிகள் குறித்த பட்டியல் பின் வருமாறு:
சென்னை மண்டலம் :
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் சேகர்பாபு,
அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,
அமைச்சர் தங்கம் தென்னரசு,
அமைச்சர் கே.என்.நேரு,
காஞ்சிபுரம் - அமைச்சர் சு. முத்துசாமி
தாம்பரம் - அமைச்சர் ர.சக்கரபாணி
ஆவடி - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
கத்திவாக்கம், மணலி, மாத்தூர், சின்னசேக்காடு மற்றும் எண்ணூர் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
வில்லிவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர், கே.கே.நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் - அமைச்சர் எ.வ.வேலு
சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் பெரும்பாக்கம் - அமைச்சர் சி.வெ. கணேசன்
திருவள்ளூர் - அமைச்சர் பி. மூர்த்தி
என தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.