'இந்தியன் 2'-ஆ , 'கேம் சேஞ்சர்'-ஆ... ரசிகர்களிடையே ஆர்வத்தை கிளப்பிய ஷங்கர் - சமுத்திரகனியின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!

இந்தியன் 2 கேம் சேஞ்சர் ஆர்வத்தை கிளப்பிய ஷங்கர் - சமுத்திரகனியின் புகைப்படம்,Samuthirakani with director shankar latest photo indian 2 | Galatta

ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் இயக்குனர் ஷங்கர் உடன் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி இணைந்து இருக்கும் புதிய புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குனர் ஷங்கர், உலகநாயகன் கமல்ஹாசன் காம்போவின் இந்தியன் 2 மற்றும் நடிகர் ராம் சரனின் அடுத்தடுத்த படைப்புகளான கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு படங்களிலும் நடிகர் சமுத்திரக்கனி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். எனவே தான் இயக்குனர் ஷங்கருடன் நிற்கும் சமுத்திரக்கனியின் புகைப்படம் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே தான் இயக்குனர் ஷங்கருடன் நிற்கும் சமுத்திரக்கனியின் புகைப்படம் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமுத்திரகனி & ஷங்கர் இணைந்திருக்கும் அந்த லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…

 

With my director ❤️❤️❤️❤️ pic.twitter.com/FrZ0J1ossu

— P.samuthirakani (@thondankani) December 3, 2023

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முதல்முறையாக நேரடி  தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் கேம் சேஞ்சர் படத்திற்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதாசிரியராக பணியாற்றி இருக்கிறார். ராம்சரண் உடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கும் இந்த கேம் சேஞ்சர் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா மிரட்டலான வில்லனாக நடிக்கிறார். மேலும் அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், சமுத்திரகனி, நாசர், நவீன் சந்திரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவில் சபீர் முஹம்மது படத்தொகுப்பு செய்யும் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இப்படத்திற்கான வசனங்களை மத்திய அமைச்சரும் முன்னணி எழுத்தாளருமான சு.வெங்கடேசன் அவர்களும் பாடலாசிரியர் விவேக் அவர்களும் எழுதி இருக்கின்றனர். கேம் சேஞ்சர் திரைப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கிட்டத்தட்ட 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதாக கேம் சேஞ்சர் பட குழு தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்து இருக்கின்றன. 

அதேபோல் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக மீண்டும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, SJ. சூர்யா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விக்ரம் படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திற்கும் ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். வெளிவந்த இந்தியன் 2 AN INTRO எனும் டீசர் வீடியோ தற்போது கடந்த மாதம் வெளிவந்து, ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த இரண்டு திரைப்படங்கள் போக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் மிகவும் பிசியாக சமுத்திரக்கனி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.