YASH19: கேஜிஎஃப் சாப்டர் 2 வெற்றியைத் தொடர்ந்து யஷ் நடிக்கும் அடுத்த அதிரடி பட டைட்டில் அறிவிப்பு பற்றிய மாஸ் அப்டேட்!

கேஜிஎஃப் சாப்டர் 2க்கு பின் யஷ் நடிக்கும் அதிரடி பட டைட்டில் அறிவிப்பு அப்டேட்,actor yash next movie title announcement update | Galatta

கன்னட சினிமாவின் நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் யஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கேஜிஎஃப் சாப்டர் 2 வெற்றியைத் தொடர்ந்து அவர் அடுத்த நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு குறித்த அப்டேட் வெளியானது. தனக்கென தனி பாணியில் அடுத்தடுத்து அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்த ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் யஷ் தனது திரைப்பயணத்தில் 19வது திரைப்படமாக அடுத்து நடிக்க இருக்கும் #YASH19 திரைப்படத்தின் டைட்டில் வருகிற டிசம்பர் 8ம் தேதி காலை 9.55 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகர் யஷ் தனது X பக்கத்தில் #YASH19 டைட்டில் அறிவிப்புக்கான போஸ்டரை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். மிகுந்த ஆவலோடு நின்ற நாட்களாக காத்திருந்த அந்த அறிவிப்பு வருகிற டிசம்பர் ம் தேதி வர இருப்பதால் ரசிகர்கள் எல்லோரும் மிகுந்த உற்சாகம் அடைந்து இருக்கின்றனர். நடிகர் யஷ் வெளியிட்ட அந்த அறிவிப்பு இதோ…

 

It’s time… 8th December, 9:55 AM.
Stay tuned to @KvnProductions #Yash19 pic.twitter.com/stZYBspuxY

— Yash (@TheNameIsYash) December 4, 2023

ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் கொண்டாடிய திரைப்படமாக கடந்த 2022 ஆம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கே ஜி எஃப் சாப்டர் 2. முன்னதாக வெளிவந்த கேஜிஎஃப் சாப்டர் 1 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த இந்த சாப்டர் 2 இமாலய வெற்றி பெற்றது. கன்னட நடிகர் யஷ், ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் கதையை நாயகனாக மிரட்டிய பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமான இந்த கேஜிஎஃப் 1 & 2 திரைப்படங்கள் கன்னடத்தை தாண்டி தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என எல்லா மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்டமான பீரியட் ஆக்சன் படமாக வெளிவந்த இந்த கேஜிஎஃப் 1 & 2 திரைப்படங்கள் இந்திய சினிமாவில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தி வசூல் செய்தியும் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்ததை தொடர்ந்து மூன்றாவது பாகமும் விரைவில் தயாராக இருப்பதாக இரண்டாம் பாகத்தின் இறுதியில் அறிவிக்கப்பட்டது. நடிகர் பிரபாஸ் நடிப்பில் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளிவரவருக்கும் சலார் திரைப்படத்திற்கு பிறகு கே ஜி எஃப் சாப்டர் 3 படத்தின் பணிகளில் இயக்குனர் பிரசாந்த் நீல் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கே ஜி எஃப் சாப்டர் 3 படத்திற்கு முன்பாக மற்றொரு புதிய திரைப்படத்தில் நடிகர் யஷ் நடிக்க இருக்கிறார். கன்னட சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த புதிய திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறது. தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையும் இயக்குனருமான கீத்து மோகன் தாஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன டிசம்பர் எட்டாம் தேதி வெளிவர இருக்கும் அறிவிப்பில் இது தெரிந்து விடும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர் கதாநாயகியாக நடித்த கீத்து மோகன் தாஸ் தொடர்ந்து தமிழில் பொய் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கே ஜி எஃப் சாப்டர் 2 திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் #Yash19 அறிவிப்பு வருகிற டிசம்பர் 8ம் தேதி வருகிறது.