இந்திய சினிமாவின் நட்சத்திர கதாநாயகிகள் ஒருவரான நடிகை ஹன்சிகா மோத்வானி இன்று டிசம்பர் 4 ஆம் தேதி தனது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியிருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் நான்காம் தேதி நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடைபெற்றது தனது காதலர் சோஹேல் கதுரியாவை ஹன்சிகா மோத்வானி திருமணம் செய்து கொண்டார். முன்னதாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஈபில் டவர் முன்பு காதலர் சோஹேல் உடன் நின்றபடி இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய காதலை அறிவித்த ஹன்சிகா மோத்வானி பிரான்சில் தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதையும் அறிவித்திருந்தார் இதனை தொடர்ந்து மிக பிரம்மாண்டமாக ஹன்சிகா மோத்வானியின் திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் அமைந்திருக்கும் கோட்டையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் ஹன்சிகா மோத்வானியின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மிகவும் கோலாகலமாக நடைபெற்ற ஹன்சிகா மோத்வானியின் இந்த அழகிய திருமண நிகழ்வு படமாக்கப்பட்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஹன்சிகாவின் லவ் ஷாதி ட்ராமா என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஹன்சிகா மோத்வானி மற்றும் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி இருக்கின்றனர். இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஹன்சிகா மோத்வானி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸிலும் பதிவுகளிலும் வெளியிட்டு இருக்கிறார். அந்தப் புகைப்படம் மற்றும் வீடியோ இதோ…
கடந்த 2003-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான 'ஹவா' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா, பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள ஹன்சிகாவின் 50-வது படமான ‘மஹா’ கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டில் பார்ட்னர் மற்றும் மை நேம் இஸ் சுருதி ஆகிய திரைப்படங்கள் ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளிவந்தன. மேலும் ஹன்சிகா மோத்வானி நடிப்பில் அடுத்த அடுத்த அட்டகாசமான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன அந்த வகையில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட 105 மினிட்ஸ் திரைப்படம் ரவுடி பேபி என்ற திரில்லர் திரைப்படம் அடுத்தடுத்து அன்சிகா நடிப்பில் வெளிவர இருக்கின்றன. மேலும் கார்டியன் மற்றும் மேன் உள்ளிட்ட திரைப்படங்களும் ஹன்சிகா நடிப்பில் ரசிகர்களுக்கு விருந்தாக வர இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஹன்சிகா மோத்வானியின் முதல் வெப் சீரிஸ் ஆக இந்த 2023 ஆம் ஆண்டில் இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் உருவான MY3 என்ற வெப் சீரிஸ் நேரடியாக Disney+ Hotstar தளத்தில் வெளிவந்தது அதை தொடர்ந்து நாஷா எனும் புதிய தெலுங்கு வெப் சீரிஸ் ஒன்றில் ஹன்சிகா மோத்வானி தற்போது நடித்து வருகிறார்.