வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா என வரிசையாக வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் பொன்ராம். இவர் தற்போது சசிகுமாரை வைத்து எம்.ஜி.ஆர் மகன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக டிக்டாக் பிரபலம் மிர்ணாளினி நடிக்கிறார். முக்கிய ரோலில் சத்யராஜ் நடிக்கிறார். 

MGR Magan Movie Post Production Update

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் நடித்துள்ளனர். வினோத் ரத்திரனசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அந்தோனி தாசன் இசையமைக்கிறார். படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நடந்து முடிந்தது. 

MGR Magan Movie Post Production Update

கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு அசத்தினர் படக்குழுவினர். தற்போது அரசு உத்தரவு படி சமூக இடைவெளியுடனும், பாதுகாப்புடனும் படங்களின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருவதாக இயக்குனர் பொன்ராம் தெரிவித்தார். லாக்டவுன் முடிந்தவுடன் விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.