செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். தமிழ் சினிமா வரலாற்றை திரும்பி பார்க்க வைத்த படம் என்றே கூறலாம். கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன், அழகம்பெருமாள், பிரதாப் போத்தன் போன்ற நடிகர்களின் சீரான நடிப்பில் அனைவரையும் ஈர்த்தது.

Parthiban Shares Aayirathil Oruvan Biriyani Meme

படம் வெளியான தருணத்தில் இதன் அருமையும், மகிமையும் புரியாதோர் பின்பு உணர துவங்கினர். ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் நம்மை சோழ தேசம் அழைத்து சென்றவர் இயக்குனர் செல்வராகவன், விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை துவங்குவார் என எதிர்பார்ப்பில் உள்ளனர் திரை விரும்பிகள். 

Parthiban Shares Aayirathil Oruvan Biriyani Meme

இந்நிலையில் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மீம் ஒன்றை ஷேர் செய்துள்ளார். இன்று ரமலான் பண்டிகையையொட்டி, பிரியம் கண்டேன், பிரியானி காணவில்லை என பதிவிட்டுள்ளார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற காட்சியின் மீமையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். என் நண்பன் வருவான், எனக்கு பிரியாணி கொடுப்பான் என பார்த்திபன் பகிர்ந்த இந்த நகைச்சுவையான மீம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.