லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகிறது 2.0. 

இப்படத்தில் ரஜினிகாந்த்துடன் ஏமி ஜாக்சன் மற்றும் அக்ஷய் குமார் முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடிக்கின்றனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 2.0 படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஆன்டனி எடிட்டிங் செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனிங் செய்திருக்கிறார். 

படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இப்படத்தின் சவுண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி தனது ட்விட்டரில் மூன்று நாட்கள் கடினமாக 2.0 படத்தின் மாஸ்டரிங் பணிகள் நடைபெற்றது என பதிவிட்டிருக்கிறார். இதுவரை எந்த படத்திற்கும் இதுபோல் உணரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.