தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக உயர்ந்து நிற்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வாழ்ந்து பல விதமான கதாபாத்திரங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தனது திரைப்படங்களின் மூலம் அனைத்து வயது ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.கடைசியாக தமிழில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் பவானி கதாபாத்திரத்தில் மிரட்டலான வில்லனாக அசத்தியிருந்தார்.

தற்போது தெலுங்கு, மலையாளம் என மற்ற தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக தெலுங்கில் இவர் நடித்த உப்பென்னா திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக 19(1)(a) என்ற மலையாளத் திரைப்படமும் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, மாமனிதன், லாபம் ,காத்துவாக்குல ரெண்டு காதல்  உள்ளிட திரைப்படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன. இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிகர் சூரி, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.  

விடுதலை திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  சன் டிவியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் தமிழ் என்னும் சமையல் நிகழ்ச்சியையும் தொகுப்பாளராக தொகுத்து வழங்குகிறார். 

முன்னதாக இந்நிகழ்ச்சியை பற்றிய அறிவிப்புகளும் ப்ரோமோ வீடியோக்களும் வெளியான நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு கோலாகலமாக தொடங்கியுள்ளது. படப்பிடிப்பின் தொடக்கத்தில் விஜய் சேதுபதி மாஸாக குத்தாட்டம் போட்டு படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் விஜய்சேதுபதி குத்தாட்டம் போடும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.