துணிவு படத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி ஆக்சன் படத்தில் இணைந்த மஞ்சு வாரியர்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

ஆர்யாவின் MrX திரைப்படத்தில் இணைந்த மஞ்சு வாரியர்,manju warrier joins with arya and gautham karthik in mr x movie | Galatta

மலையாள சினிமாவின் நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை மஞ்சு தனது திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொண்டு பின்பு 2014 ஆம் ஆண்டு ஹவ் ஓல்ட் ஆர் யூ திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஹவ் ஓல்ட் ஆர் யூ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற, அடுத்தடுத்து வரிசையாக என்னும் எப்போழும், ராணி பத்மினி, வெட்டா, ஆமீன் ஒடியன் லூசிபர் உள்ளிட்ட பல படங்களில் நடித்த மஞ்சு வாரியார் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான அசுரன் திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடிகையாக களமிறங்கினார். தனது முதல் தமிழ் திரைப்படத்திலேயே சிறந்த நடிகையாக அசுரன் படத்தில் முத்திரை பதித்த நடிகை மஞ்சு வாரியர் மீண்டும் தனது அடுத்த தமிழ் நடித்த திரைப்படம் துணிவு. 

நேர்கொண்ட பார்வை & வலிமை ஆகிய திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்த இயக்குனர் H.வினோத் - அஜித் குமார் கூட்டணியில் உருவான துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்திருந்தார். கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் வெளிவந்த துணிவு திரைப்படம் பக்கா ஆக்சன் பிளாக் திரைப்படமாக ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனிடையே மலையாளம் மற்றும் அரபிக் என இரு மொழிகளில் மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான ஆயிஷா திரைப்படமும் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து வெள்ளரி பட்டணம், காயட்டம் உள்ளிட்ட மலையாள திரைப்படங்களும் அம்ரிக்கி பண்டிட் என்னும் ஹிந்தி திரைப்படமும் மஞ்சு வாரியர் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றனர்.

இந்த வரிசையில் அடுத்ததாக, தனது அடுத்த தமிழ் படமாக Mr.X எனும் புதிய படத்தில் நடிகை மஞ்சு வாரியர் இணைந்து இருக்கிறார். இந்த Mr.X திரைப்படத்தில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த 2022ம் ஆண்டில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான FIR படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் Mr.X திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. Mr.X திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தன்வீர் மிர் ஒளிப்பதிவில் பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்யும் Mr.X திரைப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். 

விறுவிறுப்பான பக்கா ஆக்சன் திரில்லர் திரைப்படமாக தயாராகும் இப்படத்தில் தற்போது நடிகை மஞ்சு வாரியர் இணைந்து இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். துணிவு திரைப்படத்தில் மிரட்டலான ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மஞ்சு வாரியர், Mr.X திரைப்படத்திலும் அதே மாதிரியான ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடிப்பாரா என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். நடிகை மஞ்சு வாரியர் Mr.X திரைப்படத்தில் இணைந்ததை அறிவித்த அந்த அறிவிப்பு இதோ…
 

Elated to announce - @ManjuWarrier4 comes onboard #MrX.

Starring @arya_offl and @Gautham_Karthik.

Directed by @itsmanuanand.@lakku76 @venkatavmedia @dhibuofficial @tanvirmir @rajeevan69 @editor_prasanna @silvastunt @KkIndulal @utharamenon5 @Me_Divyanka @paalpandicinema pic.twitter.com/LqFjCThxZQ

— Prince Pictures (@Prince_Pictures) June 21, 2023

'ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 பட ஷூட்டிங் ஓவர்!'- லைகா ப்ரொடக்ஷன்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

'ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 பட ஷூட்டிங் ஓவர்!'- லைகா ப்ரொடக்ஷன்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் கைகோர்த்த முன்னணி நிறுவனம்... ரிலீஸ் குறித்த அதிரடியான லேட்டஸ்ட் அப்டேட்!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் கைகோர்த்த முன்னணி நிறுவனம்... ரிலீஸ் குறித்த அதிரடியான லேட்டஸ்ட் அப்டேட்!

சினிமா

"அண்ணன் நான் எறங்கி வரவா!"- தளபதி விஜயின் லியோ பட 'நா ரெடி' பாடலின் பக்கா மாஸ் ப்ரோமோ இதோ!