'வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் அதிரடி ஆக்ஷன் போலீஸ் படமான கஸ்டடி!'- ரொமான்டிக்கான TIMELESS LOVE பாடல் இதோ!

வெங்கட் பிரபுவின் கஸ்டடி பட TIMELESS LOVE பாடல் வெளியானது,venkat prabhu naga chaitanya in custody movie timeless love song out now | Galatta

தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் இயற்றிய முதல் திரைப்படம் சென்னை 600028. தனது முதல் படத்திலேயே மக்களின் மனம் கவரந்த இயக்குனர் வெங்கட் பிரபு, இயக்கத்தில் அடுத்தடுத்து வெளிவந்த சரோஜா & கோவா ஆகிய படங்கள் பெரும் வரவேற்ப்பு பெற்றன. தொடர்ந்து என்டர்டெய்னிங் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்த்த வெங்கட் பிரபு, தனது அடுத்த திரைப்படத்தில் உச்ச நட்சத்திர நடிகரான அஜித்குமாரை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அஜித் குமாரின் 50வது திரைப்படமாக தயாரான மங்காத்தா மெகா ஹிட் பிளாக்பஸ்டரானது. அடுத்தடுத்து கார்த்தியுடன் பிரியாணி, சூர்யாவுடன் மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 600028 ||, முதல் முறை நடிகர் சிலம்பரசன்.TR உடன் மாநாடு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக அசோக் செல்வன் நடித்த மன்மத லீலை திரைப்படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. திரைப்படங்கள் மட்டுமல்லாது வெப் சீரிஸிலும் களமிறங்கிய வெங்கட் பிரபு லைவ் டெலிகாஸ்ட் என்னும் வெப்சீரிஸை இயக்கினார். 

தொடர்ந்து குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படத்தில் லோகம் எனும் எபிசோடையும் இயக்கிய வெங்கட் பிரபு, கடைசியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த விக்டிம் ஆந்த்ராலஜி வெப் சீரீஸில் கன்ஃபசன் எனும் எபிசோடையும் இயக்கியிருந்தார். இந்த வரிசையில் தற்போது தெலுங்கு திரை உலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. அந்த வகையில் தனது திரைப்பயணத்தில் 11-வது திரைப்படமாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் கஸ்டடி. பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தனது திரை பயணத்தில் 22 ஆவது திரைப்படமாக நடிக்கும் கஸ்டடி திரைப்படம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகும் முதல் நேரடி தெலுங்கு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.  தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கஸ்டடி படத்தில் நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க, பிரபல இளம் தெலுங்கு நடிகை கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அரவிந்த் சுவாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வென்னெலா கிஷோர், ப்ரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அதிரடி போலீஸ் திரைப்படமாக தயாராகும் கஸ்டடி படத்திற்கு SR.கதிர் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்கிறார். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து கஸ்டடி திரைப்படத்திற்கு, இசை அமைக்கின்றனர். கஸ்டடி திரைப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு (2023) கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வெங்கட் பிரபுவின் கஸ்டடி திரைப்படம் மே 12-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் கஸ்டடி திரைப்படத்தின் அடுத்த பாடலாக ரொமான்டிக்கான TIMELESS LOVE பாடல் தற்போது வெளியானது. அஅத்தலான அந்த பாடல் இதோ…
 

எல்லோரும் பாகம் 3 பற்றி கேட்கிறார்கள்!- மணிரத்னம் - ARரஹ்மான் இணைந்த பொன்னியின் செல்வன் 2 ஸ்பெஷல் பேட்டி இதோ!
சினிமா

எல்லோரும் பாகம் 3 பற்றி கேட்கிறார்கள்!- மணிரத்னம் - ARரஹ்மான் இணைந்த பொன்னியின் செல்வன் 2 ஸ்பெஷல் பேட்டி இதோ!

'இது அவனே ஏதோ உளறினது..!'- RJபாலாஜி எழுதிய வசனம் பற்றி பேசிய விக்னேஷ் சிவனின் கலகலப்பான வீடியோ இதோ!
சினிமா

'இது அவனே ஏதோ உளறினது..!'- RJபாலாஜி எழுதிய வசனம் பற்றி பேசிய விக்னேஷ் சிவனின் கலகலப்பான வீடியோ இதோ!

தனுஷுடன் பக்கா ஆக்சனில் கைகோர்க்கும் RRR பட புகழ் ஹாலிவுட் நடிகர்... கேப்டன் மில்லர் பட வேற லெவல் அப்டேட் இதோ!
சினிமா

தனுஷுடன் பக்கா ஆக்சனில் கைகோர்க்கும் RRR பட புகழ் ஹாலிவுட் நடிகர்... கேப்டன் மில்லர் பட வேற லெவல் அப்டேட் இதோ!