'ARரஹ்மானுடன் 30 வருட பயணம் - பொன்னியின் செல்வன் படம்... எது பெரிய சாதனை?'- வைரலாகும் மணிரத்னத்தில் அட்டகாசமான பதில் இதோ!

ARரஹ்மானுடனான பயணம் பொன்னியின் செல்வன் குறித்து பேசிய மணிரத்னம்,mani ratnam about 30 years journey and ps movie with ar rahman | Galatta

இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் அவர்களின் திரைப்பயணத்தில் சாதனை மணிமகுடமாக அமைந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்ட பொருட்செலவில் புகழ்மிக்க எழுத்தாளர்கள் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாக்கப்பட்ட இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக மணிரத்னம் உருவாக்கினார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று கடந்த ஆண்டு (2022) வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டாக 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில், ரவிவர்மனின் ஒளிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பு செய்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

முன்னதாக வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. இதனிடையே நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான சிறப்பு நேர்காணலில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் கலந்து கொண்டனர். ரோஜா திரைப்படம் தொடங்கி பொன்னியின் செல்வன் வரை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஜோடி இணைந்து பணியாற்றி வருகிறது. 

இதுவரை மணிரத்னம் - ரஹ்மான் கூட்டணியில் வெளிவந்த அத்தனை பாடல்களும் ரசிகர்களின் இதயங்களை விட்டு நீங்கா இடம் பிடித்தன. இந்த சிறப்பு நேர்காணலில் இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம், ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடன் நீங்கள் இணைந்து பணியாற்றிய இந்த 30 வருட பயணம், இரண்டு பாகங்களாக உருவாக்கிய பொன்னியின் செல்வன் படம் இந்த இரண்டில் எது மிகப்பெரிய சாதனையாக நீங்கள் நினைக்கிறீர்கள்? என கேட்ட போது, “30 ஆண்டுகள் எப்படி போனது என்றே தெரியவில்லை. ஆனால் இரண்டு பாகங்களாக இயக்கிய இந்த படம் மிகவும் கடினமானது” என தனக்கே உரித்தான பாணியில் இயக்குனர் மணிரத்னம் பதிலளித்துள்ளார். வைரலாகும் இந்த சிறப்பு நேர்காணல் வீடியோ இதோ…
 

'இது அவனே ஏதோ உளறினது..!'- RJபாலாஜி எழுதிய வசனம் பற்றி பேசிய விக்னேஷ் சிவனின் கலகலப்பான வீடியோ இதோ!
சினிமா

'இது அவனே ஏதோ உளறினது..!'- RJபாலாஜி எழுதிய வசனம் பற்றி பேசிய விக்னேஷ் சிவனின் கலகலப்பான வீடியோ இதோ!

தனுஷுடன் பக்கா ஆக்சனில் கைகோர்க்கும் RRR பட புகழ் ஹாலிவுட் நடிகர்... கேப்டன் மில்லர் பட வேற லெவல் அப்டேட் இதோ!
சினிமா

தனுஷுடன் பக்கா ஆக்சனில் கைகோர்க்கும் RRR பட புகழ் ஹாலிவுட் நடிகர்... கேப்டன் மில்லர் பட வேற லெவல் அப்டேட் இதோ!

'SK ரசிகர்களே தயாரா?'- சிவகார்த்திகேயனின் அதிரடியான மாவீரன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு... ட்ரெண்டாகும் மிரட்டலான புது வீடியோ இதோ!
சினிமா

'SK ரசிகர்களே தயாரா?'- சிவகார்த்திகேயனின் அதிரடியான மாவீரன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு... ட்ரெண்டாகும் மிரட்டலான புது வீடியோ இதோ!