உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்திருக்கும் விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகி தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கமல்ஹாசனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள விக்ரம் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக தயாராகியிருக்கும் விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் 3 நிமிடங்களே தோன்றினாலும் ஒட்டுமொத்த திரையரங்குகளிலும் நடிகர் சூர்யா அதிர வைத்தார். உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜின் FAN BOY சம்பவமாக வெளிவந்திருக்கும் விக்ரம் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டன்ட் இயக்கத்தில் பக்காவான ஆக்சன் ப்ளாக் திரைப்படமாக வெளிவந்திருக்கும் விக்ரம் திரைப்படத்தில் கிரஷ் கங்காதரனின் ஒளிப்பதிவும், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பும் மேலும் பலம் சேர்த்துள்ளன. குறிப்பாக இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் விக்ரம் திரைப்படத்தை மற்றொரு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தை கண்டு ரசித்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார். அப்போது உடனிருந்த பாலிவுட் நடிகர் சல்மான் கானும் இருவரையும் பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…