தெலுங்கு திரை உலகின்  மிகப்பெரிய முன்னணி நடிகராகத் திகழ்கிறார் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு. ஏழு வயது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மகேஷ்பாபு, 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜகுமாரடு திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து தெலுங்கு சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருக்கிறார்.  

இவர் நடித்து மெகா ஹிட்டடித்த ஒக்கடு திரைப்படம் தான் தமிழில் இளைய தளபதி விஜய் நடித்து வெளியாகிய மெகாஹிட் திரைப்படம் கில்லி.  இதேபோல் இவர் நடித்து சூப்பர் ஹிட்டான போக்கிரி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகி சக்கை போடு போட்டது.எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்து தமிழில் சூப்பர் 
ஹிட்டான நியூ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து கவனம் ஈர்த்தார்.

மகேஷ்பாபு கொரடலா சிவா உடன் இணைந்து பரத் எனும் நேனு ஸ்ரீமந்துடு ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார்.மேலும் பிசினஸ்மேன் ,பிரமோற்சவம், ஸ்பைடர் என சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். 
 
அதேபோல் தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்குகிறார் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ். ஆரம்பகட்டத்தில் கர்த்தாவாகவும்  திரைக்கதை ஆசிரியராகவும் தன் பயணத்தை தொடங்கினார் . 2002 இல் வெளியான நூல் எனவே திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ். தொடர்ச்சியாக பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவரது இயக்கத்தில் முன்னணி நடிகர்கள்  நடித்த அத்தனை திரைப்படங்களும் அவர்களது திரையுலக பயணத்தில் மைல்கல்லாக இருக்கும் திரைப்படமாகவே அமைந்தது. 
 
தெலுங்கு திரையுலகில்  நடிகர்களுக்கான தனி ரசிகர் பட்டாளம் இருப்பதை போன்று திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ்-ற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

கடைசியாக த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அல வைகுண்டபுரம்லோ  மிகப்பெரிய வெற்றியடைந்தது.  த்ரிவிக்ரம் அல்லு அர்ஜுன் கூட்டணியில் வெளிவந்த ஜூலாயி S/O சத்தியமூர்த்தி ஆகிய திரைப்படங்களும் சூப்பர் ஹிட் அடித்தன.

திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ்வும் மகேஷ்பாபுவும் முதல்முறையாக அத்தடு என்ற திரைப்படத்தின் மூலமாக இணைந்தனர். தொடர்ந்து 2010ஆம் ஆண்டு கலிஜா படம்  மூலம்  இரண்டாவது முறையாக இணைந்த கூட்டணி பதினோரு ஆண்டுகளுக்குப் பின்பு இப்போது மூன்றாவது முறையாக இணைகிறது. ஹாரிகா ஹாசினி கிரியேஷன்ஸ்  ராதா கிருஷ்ணா தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகிறது.

ஹாரிகா ஹாசினி கிரியேஷன்ஸ் ராதா கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில்  இந்த திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் 2022ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.