இயக்குனர் பாலாஜி மோஹன் இயக்கத்தில் குறும்புத்தனமான டான் பாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்கும் மாரி 2 படத்தில் ரோபோ ஷங்கர், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், டவினோ தாமஸ் போன்ற நட்சத்திரங்கள் உள்ளனர்.       

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான ரவுடி பேபி பாடல் அதிக பார்வையாளர்களை ஈர்த்து இணையத்தில் பெரிதும் வளம் வருகிறது.   

தற்போது இப்படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்து ட்விட்டரில் அறிவித்துள்ளனர் படக்குழுவினர். 

இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் வெளிவரவிருக்கும் இப்படம் தனுஷ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.