தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெங்கட் பிரபு,தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா என பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இப்போது சிலம்பரசனுடன் இணைந்திருக்கும் வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். 

maanadu first single postponed producer puts out his reason

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இத்திரைப்படத்தை ரிச்சர்ட்.எம்.நேதன்  ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன்.கே.எல் படத்தொகுப்பு செய்கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா,கல்யாணி பிரியதர்ஷன் ,பிரேம்ஜி அமரன் ,எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா ,கருணாகரன் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது. 

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் இருந்து FIRST SINGLE பாடல் ரம்ஜான் தினத்தன்று வெளியிடுவதாக இருந்தது ஆனால் நேற்று எதிர்பாராத விதமாக திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு அவர்களின் தாயார் மணிமேகலை உயிரிழந்தார். 

இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரன் வீட்டில் ஏற்பட்டுள்ள துயரத்தில் பங்கு கொள்ளும் விதமாக ரம்ஜான் அன்று வெளியாவதாக இருந்த இத்திரைப்படத்தின் FIRST SINGLE பாடல் , தற்போது சில நாட்கள் தள்ளி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவு செய்துள்ளார்.