தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் STR.கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.வெங்கட் பிரபுவின் மாநாடு,பத்துதல,கெளதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன்,நடிகர் சங்கத்திற்காக ஒரு படம் என்று செம பிஸியாக இருக்கிறார் சிம்பு.

STR என்ன செய்தாலும் அவரை பற்றி என்ன செய்தி வந்தாலும் அது வைரலாகி விடும்.சமீபத்தில் சிம்புவின் ட்ரான்ஸபார்மேஷனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் மாநாடு படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன்,எஸ்.ஜே.சூர்யா,பாரதிராஜா.எஸ்.ஏ.சந்திரசேகர் என்று பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.யுவன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

மாநாடு படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக கலந்துகொண்டு வந்தார் சிம்பு.இந்த படத்தின் இறுதிக்கட்ட சில நாட்கள் படப்பிடிப்பு மட்டும் மீதம் உள்ளது என்று வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.இந்த படத்தின் டப்பிங் வேலைகள் லாக்டவுனுக்கு முன் தொடங்கியது.

இந்த படத்தின் முதல் பாடல் வரும் ஜூன் 21ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.தற்போது இந்த பாடலின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.