சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் படம் விஸ்வாசம். இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும், திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார்கள். இப்படத்தின் முதல் பாடலான அடிச்சு தூக்கு கலக்கி வரும் நிலையில், விஸ்வாசம் படம் பற்றிய அடுத்த செய்தி ஒன்று வெளியாகியது.

தற்போது விஸ்வாசம் படத்தின் பாடலாசிரியரான விவேகா கலாட்டாவிற்கு அளித்த பேட்டியில், அடிச்சுதூக்கு பாடல் உருவானவிதம் பற்றி எடுத்துரைத்தார். இதில் மங்காத்தா கட்ட போல என்ற வரி இடம்பெற்றிருக்கும். இந்த வார்த்தயை கேட்டவுடன் இயக்குனர் சிவா மிகவும் ரசித்ததாக கூறினார்.