தளபதி விஜய் நடித்த மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடலின்  மூலம் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களின் மனதையும் ஈர்த்தவர் பாடலாசிரியர் விவேக்.  

Lyricist Vivek Tweets Regarding The Kaja Storm Requesting Help From The People

தீபாவளி சரவெடியாய் வெளியான சர்கார் படத்திலும் அசத்தலான பாடல்களை எழுதியதோடு, இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் தளபதி 63 படத்திற்கும் இவர் தான் பாடலாசிரியர் என்று அதிகாரப்பூர்வ தகவல் படக்குழுவினர் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

அண்மையில் வந்து சென்ற கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்த உயிர்களை நினைத்து கவலையில் தனது  ட்விட்டர் பக்கத்தில், தங்கள் வாழ்வாதாரமாக கருதும் மாடுகளை, ஆடுகளைக் காப்பதற்காக புயல் வேளையில் வெளியே சென்று உயிர் நீத்தவர்கள் எண்ணிக்கை ஏராளம் என்று அறிந்து வருத்துகிறேன். நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டுகின்றேன். அது பணமோ, உணவோ, பொருட்களோ, நேரமோ, அவர்கள் துன்பம் உலகறியச் செய்வதோ என்று பதிவிட்டுள்ளார்.   

தளபதி 63 பணிகளில் பிஸியாக இருந்தாலும், மனிதனாக விவேக் செய்த இக்காரியம் பாராட்டிற்குரியது. விவேக் தவிர்த்து அனைத்து திரைத்துறை சார்ந்தவர்களும் தங்களால் முடிந்த நற்செயலை செய்து வருகின்றனர்.