பிரபுதேவா,தமன்னா நடிப்பில் 2016-ல் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் தேவி.ஹாரர் காமெடி படமாக உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை படக்குழு படமாக்கி வருகின்றனர்.

Love Me Lyrical Video Song From Devi 2 Released Starring PrabhuDeva Tamanna Nanditha Swetha

இந்த படத்திலும் பிரபுதேவா,தமன்னா,RJ பாலாஜி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படம் மே 31ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

Love Me Lyrical Video Song From Devi 2 Released Starring PrabhuDeva Tamanna Nanditha Swetha

தற்போது இந்த படத்தின் லவ் மீ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.முதல் பாகத்தில் வந்த சல்மார் பாடலை போல இந்த பாடல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்