நாடு: முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் பிக் பாஸ் தர்ஷன்... எங்கேயும் எப்போதும் இயக்குனரின் அடுத்த படைப்பின் அசத்தலான வீடியோ பாடல்!

பிக் பாஸ் தர்ஷனின் நாடு பட வந்தனம் வந்தனம் வீடியோ பாடல் வெளியீடு,bigg boss tharshan in naadu movie vandhanam vandhanam video song | Galatta

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் சரவணன் இயக்கத்தில் பிக் பாஸ் தர்ஷன் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் தான் நாடு இந்த நாடு திரைப்படத்திலிருந்து வந்தனம் வந்தனம் எனும் வீடியோ பாடல் தற்போது வெளிவந்துள்ளது. பிரபல இசையமைப்பாளர் C.சத்யா இசையமைத்திருக்கும் நாடு படத்தின் இந்த வந்தனம் வந்தனம் பாடலை இயக்குனர் எம் சரவணன் எழுதி இருக்கிறார் கோல்ட் தேவராஜ் முத்து சிற்பி புரட்சிமணி மற்றும் நேரு சாமிதுரை ஆகியோர் இணைந்து பாடி இருக்கின்றனர். மலை கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு நகரும் கதை களத்தில் தயாராகி இருக்கும் இந்த நாடு திரைப்படத்தில் மலை கிராம மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் ஒரு கொண்டாட்ட பாடலாக சற்று முன்பு வெளிவந்திருக்கும் இந்த வந்தனம் வந்தனம் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அசத்தலான அந்த வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.

 

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக்காக வெளிவந்த கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கிய பிக் பாஸ் தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் 2வது படம் தான் நாடு. இயக்குனர் M.சரவணன் இயக்கத்தில் தர்ஷன் உடன் இணைந்து நடிகை மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த நாடு திரைப்படத்தில் சிங்கம் புலி, மறைந்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி, அருள் தாஸ், இன்ப ரவிக்குமார், வசந்தா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். KA.சக்திவேல் ஒளிப்பதிவில் பொன் கதிரேஷ்.PK படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த நாடு திரைப்படத்திற்கு C,சத்யா இசையமைத்திருக்கிறார்.

இந்திய சினிமாவின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் உதவி இயக்குனராக பணிபுரிந்து தமிழ் சினிமாவிற்குள் இயக்குனராக நுழைந்தவர் இயக்குனர் M.சரவணன். தனது முதல் திரைப்படமாக கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் M.சரவணன் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, அனன்யா மற்றும் சர்வானந்த் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த எங்கேயும் எப்போதும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது மேலும் விமர்சன ரீதியாகவும் அனைவரது பாராட்டுகளையும் பெற்றது அதை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்த இவன் வேற மாதிரி படத்தை M.சரவணன் இயக்கி இருந்தார். விறுவிறுப்பான திரைப்படமாக வெளிவந்த இவன் வேற மாதிரி திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

அதன் பிறகு இயக்குனர் M.சரவணன் இயக்கத்தில் மீண்டும் நடிகர் ஜெய் கதையின் நாயகனாக நடித்த வலியவன் திரைப்படம் எதிர்பார்த்த கவனத்தை ஈர்க்க தவறியது. அதை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு, கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் M.சரவணன் இயக்கத்தில் கிருஷ்ணா நடித்த ராக்கி திரைப்படம் வெளிவந்தது. இந்த வரிசையில் இயக்குனர் M.சரவணனின் அடுத்த படைப்பாக பிக் பாஸ் தர்ஷன் கதாநாயகனாக நடித்திருக்கும் நாடு திரைப்படம் வரவிருக்கிறது. கடைசியாக இயக்குனர் M.சரவணன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறத் தவறிய நிலையில் இந்த நாடு படம் நிச்சயமாக அவருக்கு ஒரு கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.