TRAIN: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - மிஷ்கின் இணையும் அதிரடியான புதிய படம்... சர்ப்ரைஸாக வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிஷ்கின் இணையும் TRAIN,makkal selvan vijaysethupathi mysskin in train movie announcement | Galatta

மக்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அடுத்து நடிக்கும் புதிய திரைப்படம் TRAIN. தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் மிஷ்கின் இந்த TRAIN திரைப்படத்தை எழுதி இயக்குகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ஃபௌஸியா பானு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். நாளை டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் இந்த TRAIN திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. இதனை அறிவிக்கும் வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருக்கும் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கும் படக்குழு, "நாளை முதல் TRAIN பயணம் தொடங்குகிறது" என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். சற்று முன்பு வெளிவந்து சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த இயக்குனர் மிஷ்கின் - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கூட்டணியின் TRAIN திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் இதோ... 

 

The #Train journey begins tomorrow @DirectorMysskin @VijaySethuOffl pic.twitter.com/hFOPq5p0fT

— Kalaippuli S Thanu (@theVcreations) November 30, 2023

முன்னதாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் தயாராகி நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருக்கும் பிசாசு 2 திரைப்படத்திற்காக ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். தனக்கென தனி பாணியில் கதை சொல்லும் இயக்குனர் மிஷ்கின் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாவது பாகமாக நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க தயாராகி இருக்கும் இந்த பிசாசு 2 திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குனர் மிஷ்கின் அவர்கள் விரைவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்க இருப்பதாகவும் அதன் கதையை எழுதி கொண்டு இருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்த நிலையில் அதன் அறிவிப்பாக தற்போது TRAIN திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் TRAIN திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் வரும் நாட்களில் ஒவ்வொன்றாக விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஹிந்தியில் கத்ரீனா கைஃப் உடன் இணைந்து நடித்திருக்கும் மேரி கிறிஸ்மஸ் திரைப்படம் வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. முன்னதாக விடுதலை பாகம் 1 படத்தை தொடர்ந்து அதன் அடுத்த பாகமாக, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி உடன் இணைந்து பெருமாள் வாத்தியார் எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை பாகம் 2 திரைப்படம் அடுத்த சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தனது 50வது திரைப்படமாக குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாகும் மகாராஜா திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் விஜய் சேதுபதி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் திரைப்படத்தின் இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் தனது 51-வது திரைப்படமாக உருவாகும் VJS51 படத்தில் நடித்திருக்கிறார் .மலேசியாவில் படமாக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அடுத்ததாக தேசிய விருது பெற்ற "காக்கா முட்டை" இயக்குனர் மணிகண்டன் உடன் கடைசி விவசாயி படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் மக்கள் செல்வன் புதிய தமிழ் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும் காந்தி டாக்ஸ் எனும் மௌனப் படத்திலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார் .