LOVER: 2வது முறை இணைந்த மணிகண்டன் - GOOD NIGHT படக்குழுவின் அடுத்த பட அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் இதோ!

மணிகண்டன் - GOOD NIGHT படக்குழுவின் LOVER பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு,manikandan in lover movie first look out now from makers good night | Galatta

குட் நைட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2வது முறையாக மணிகண்டன் மற்றும் குட் நைட் படக்குழு இணைந்திருக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. இந்த 2023 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட திரைப்படம் குட் நைட். அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்த குட் நைட் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதன் தயாரிப்பாளர்கள் மீண்டும் இரண்டாவது முறையாக நடிகர் மணிகண்டன் உடன் இணைந்து அவர் கதாநாயகனாக நடிக்கும் அவரது அடுத்த புதிய படத்தை தயாரித்துள்ளனர். இயக்குனர் பரசுராம் வியாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த புதிய திரைப்படத்திற்கு லவ்வர் என பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் இந்த லவ்வர் திரைப்படத்தின் படப்பிடிப்பை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் மணிகண்டன் உடன் இணைந்து நடிகை ஸ்ரீ கௌரி பிரியா கதாநாயகியாக நடித்துள்ள இந்த லவ்வர் திரைப்படத்தில் கண்ணா ரவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜகமே தந்திரம், மகான், சீதாராமம், ராக்கி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்த லவ்வர் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். குட் நைட் படத்தின் படத்தொகுப்பாளர் பரத் விக்ரம் படத்தொகுப்பு செய்திருக்கும் லவ்வர் திரைப்படத்திற்கு தமிழ் சினிமாவின் மிக முக்கிய இசையமைப்பாளரும் குட்நைட் படத்தின் இசையமைப்பாளருமான ஷான் ரோல்டன் அவர்கள் இசையமைக்கிறார். இந்த நிலையில் தற்போது லவ்வர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது மேலும் இந்த லவ்வர் திரைப்படம் வருகிற 2024 ஆம் ஆண்டு காதலர் தின வெளியீடாக பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர் சற்று முன்பு வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் மணிகண்டனின் லவ்வர் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…

 

It’s #Lover !!
Coming to win your hearts very soon ❤️

Directed by @Vyaaaas
A @RSeanRoldan musical !!!#LoveIsWar #LoverFL@Manikabali87 @gouripriyareddy @iamkannaravi @kshreyaas @barathvikraman @thinkmusicindia @MillionOffl @Yuvrajganesan @mageshraj @mrp_entertain @proyuvraaj pic.twitter.com/2Li02g8FtM

— Think Music (@thinkmusicindia) November 30, 2023

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவரும் திரைப்பட எழுத்தாளருமான மணிகண்டன் அவர்கள் தொடர்ந்து தனது படைப்புகளால் மக்களின் மனதை கவர்ந்து வருகிறார். குறிப்பாக விக்ரம் வேதா திரைப்படத்தில் வசனகர்த்தாவாக அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த மணிகண்டன் தொடர்ந்து நடிகராகவும் விக்ரம் வேதா படம் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா, சில்லு கருப்பட்டி, பாவக் கதைகள் (NETFLIX ஆந்தாலஜி சீரிஸ்), ஏலே உள்ளிட்ட படங்களில் கவனம் ஈர்த்தார். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெய் பீம் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்ற மணிகண்டன் தொடர்ந்து சில நேரங்களில் சில மனிதர்கள் மற்றும் குட் நைட் உள்ளிட்ட படங்களிலும் ரசிக்க வைத்தார். கடைசியாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளிவந்த மத்தகம் எனும் வெப் சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடித்திருந்தார். இந்த வரிசையில் நடிகர் மணிகண்டனின் அடுத்த புதிய படமாக வரும் 2024 ஆம் ஆண்டில் வெளிவர இந்த லவ்வர் திரைப்படம் தயாராகி வருகிறது.