தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.அறம்,கோலமாவு கோகிலா என ஹீரோ இல்லாமல் இவர் நடிக்கும் படங்களை பார்ப்பதற்கும் ரசிகர்கள் தயாராக உள்ளனர். 

Latest Promo Video From Nayanthara Airaa With A Strong Dialogue Also Starring Yogibabu

இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஐரா திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளிவர உள்ளது.இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.இந்த படத்தை சர்ஜுன் இயக்கியுள்ளார். கலையரசன்,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Latest Promo Video From Nayanthara Airaa With A Strong Dialogue Also Starring Yogibabu

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக 10 வருடங்களுக்கு மேலாக இருந்து வரும் நயன்தாரா பல ஏற்ற இறக்கங்களை பார்த்தவர்.இவரை பற்றிய விமர்சனங்கள் பல வந்தாலும் அவற்றை எல்லாம் சமாளித்து தற்போது முன்னணி நடிகையாக உள்ளார்.தற்போது இவரை பற்றி ராதாரவி ஒரு கருத்தை கூற அது மீண்டும் சர்ச்சையில் முடிந்துள்ளது.

Latest Promo Video From Nayanthara Airaa With A Strong Dialogue Also Starring Yogibabu

தேவையற்ற விமர்சனங்களுக்கு நயன்தாரா எப்போதும் பதிலளிப்பதில்லை.ஆனால் ராதாரவி கூறிய கருத்து திரைத்துறையினர் மற்றும் பிரபலங்கள் பலரிடம் எதிர்ப்பை பெற்றது.இதற்கு பதிலளிக்கும் விதமாக KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது ஐரா படத்தின் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த ப்ரோமோவை கீழே காணலாம்