இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடிப்பில் பொங்கலன்று வெளியாகவிருக்கும் படம் விஸ்வாசம். இப்படத்தின் செகண்ட் லுக்கில் தல அஜித் பைக்கில் வருவது போன்ற போஸ்ட்டரை வெளியிட்டனர் படக்குழுவினர். தற்போது இதே பாணியை கடைபிடித்திருக்கிறார் நடிகை லக்ஷ்மி ராய்.   

Lashmi Raai To Follow Thala Ajith Poster Trick For Her Movie Cindrella

எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்த வினோ வெங்கடேஷ் இயக்கும் திகில் படத்தில் லக்ஷ்மி ராய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திகில் படமாக உருவாகும் இந்த படத்திற்கு சின்ட்ரல்லா என்று தலைப்பு வைக்கப்பட்டது.   

Lashmi Raai To Follow Thala Ajith Poster Trick For Her Movie Cindrella

லக்ஷ்மி ராய் பேயாகவும், இசைக்கலைஞராகவும் இருவேடங்களில் வருகிறார். ஏற்கனவே 8 கதைகளை கேட்டு அவற்றில் நடிக்கும் யோசனையில் இருந்த ராய் லட்சுமிடம் சின்ட்ரல்லா கதையை சொன்னதுமே மற்ற படங்களை தவிர்த்து விட்டு இதில் நடிக்க வந்துவிட்டாராம்.  

அஸ்வமித்ரா இசையமைக்கும் இப்படத்திற்கு ராமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் ஒரு பகுதியில் குழந்தைகளுக்கு பிடித்த வி‌ஷயங்களும், இன்னொரு பகுதி பயமுறுத்துவதாகவும் இருக்கும். பேய் வேடத்துக்கு ராய் லட்சுமி 4 மணிநேரம் மேக்கப் போட்டு நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.  

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இப்படம் திரைக்கு வருமென்று படக்குழுவினர் கூறி வருகின்றனர். இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார் லக்ஷ்மி ராய்.