நெற்றிக்கண் பட முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!
By | Galatta | June 07, 2021 21:16 PM IST

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழும் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சீரியல் கில்லர்- த்ரில்லர் திரைப்படமாக வெளிவர உள்ள நெற்றிக்கண் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா பார்வையற்றவராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரௌடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள நெற்றிக்கண் திரைப்படத்தை அவள் திரைப்படத்தின் இயக்குனர் மில்லின்ட் ராவ் இயக்குகிறார். இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்க தமிழ் சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ஆர் டி ராஜசேகர் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நெற்றிக்கண் திரைப்படத்தின் முதல் பாடலான “இதுவும் கடந்து போகும்” பாடலின் முன்னோட்டமாக ஒரு புரோமோ வீடியோ பாடகர் சிட் ஸ்ரீராம் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. இதனையடுத்து இந்த பாடலுக்கு ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில் நெற்றிக்கண் திரைப்படத்தின் பாடல் வருகிற ஜூன் 9ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
“இதுவும் கடந்து போகும்” நெற்றிக்கண் முதல் பாடலை சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவரான கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். முன்னதாக நடிகை நயன்தாராவின் பிறந்தநாளன்று வெளியான நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக வெளிவரவுள்ள இந்த பாடல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Mark your calendars for 9️⃣JUNE 9️⃣AM!#IdhuvumKadandhuPogum from #Netrikann coming your way! ❤️
— Sony Music South (@SonyMusicSouth) June 7, 2021
The #HealingSong ! 🎶@Rowdy_Pictures #Nayanthara @VigneshShivN @milind_rau @ajmal_amir #Chaitanyarao @RDRajasekar @sidsriram @kross_pictures @lyricist_kN#NetrikannSingle pic.twitter.com/p8apSXa7Vk
This much loved actress gets married in a private ceremony - pictures go viral!
07/06/2021 04:00 PM
Bhumika in the next season of Bigg Boss? - Check what she has to say!
07/06/2021 03:19 PM