தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.அறம்,கோலமாவு கோகிலா என ஹீரோ இல்லாமல் இவர் நடிக்கும் படங்களை பார்ப்பதற்கும் ரசிகர்கள் தயாராக உள்ளனர்.

Lady Superstar Nayanthara Joins with Leading TV Channel Official Announcement Out

இவர் தற்போது தளபதி 63,தர்பார் உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்து வருகிறார் அதோடு சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.தற்போது பிரபல சேனல் ஒன்றில் இவர் இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Lady Superstar Nayanthara Joins with Leading TV Channel Official Announcement Out

பிரபல டிவி சேனல் ஆன கலர்ஸ் தமிழில் நயன்தாரா இணைந்துள்ளார் என்ற அறிவிப்பை அறிவித்துள்ளனர்.ஆனால் நயன்தாரா ஒரு பேட்டி கொடுக்கிறாரா அல்லது ஏதேனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளாரா என்ற தகவல் கிடைக்கவிலல்லை.இது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Lady Superstar Nayanthara Joins with Leading TV Channel Official Announcement Out

நடிகர்கள் இதுபோன்ற டிவி ஷோக்களில் கலந்து கொள்வதும் தொகுத்து வழங்குவதும் புதிதல்ல.ஆனால் நயன்தாரா போன்ற ஒரு உச்ச நட்சத்திரத்தை தொலைக்காட்சியில் பார்ப்பது ரசிகரக்ளுக்கு ஒரு புது முயற்சியாக இருக்கும்.