நடிகை நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் மகளாக நடித்த மானஸ்வி, 2018-ம் சிறந்த குழந்தை நட்சத்திரம் என்றே கூறலாம். தற்போது இவர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகிவரும் மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடிக்கிறார் என்று நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது. 

Kid Actress Manasvi To Play Daughter For Makkal Selvan Vijaysethupathi In Maamanidhan

YSR ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியியுடன் காயத்ரி ஹீரோயினாக நடிக்கிறார். ஜோக்கர் பட புகழ் குரு சோமசுந்தரம் விஜய் சேதுபதியின் நண்பராக நடிக்கிறார்.

படத்திற்கு இசைஞானி இளையராஜாவும், யுவுனும் சேர்ந்து இசையமைக்கிறார்கள். இசையமைக்கும் பணி இன்னும் துவங்கவில்லை என்பது கூடுதல் தகவல். மைனா, பைரவா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.